வொய் திஸ் கொலவெறி டி!!

ஹாய் மாமேய் திஸ் இஸ் ஹாட் சாங் மை கேர்ள் சாங்கு,....
சுவீட்டு கேர்ள் மை லாஸ்ட் கேர்ள் ஜஸ்ட் மை கேல் டா,...
ட்ரிங் ட்ரிங் போன் ட்ரிங் அவளே என் காலர்  டுயுன்,...   
என் கண்ணே என் முன்னே  என்னை கொலை செய்தாலே,.....
முன்னே அவள் தூரமாய் ஒரு நிலவாய் என்னை பார்த்து சென்றாள்,..
நானோ என்னை மட்டும் பார்த்து சென்றலேன்றே நின்றேன் நிலையறியாது,...
காதல் என்ன கள்வர்களின் ராஜ்யமோ,......
கள்வன் நானில்லை காவலனாய் நானே நின்றேன்,...
தொலை தூர காற்றாய் இருந்தாலும் எனக்கு அவள் என்னை வருடும் சில சில்லான காற்றின் உறசலானால் ,...
கற்பை துளைத்த கன்னி நீயோ என் கற்பை காகிதமாய் பறக்க செய்த கயவள் நீயோ,....
வொய் திஸ் கொலவெறி டி!!!

-'கொலவெறி' ரா.சதீஷ் பாலாஜி ,..
                   

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அன்பர்களே,..

ஆதமும் ஏவாலும் கொண்ட அந்த மனித விதை
இன்று ஆண்பால் பெண்பால் என்றே வளரக் கண்டேன்
சினம்கொண்டு சிலுவையில் ஏற்றப்பட்ட இயேசுவை  காண என் கண்கள் மறுத்தன
படைப்பின் பொருளை துளைத்தது மனித இனமோ என்றே எண்ணி இருந்தேன்
ஆனால் அது ஒரு பரம் பொருளை தன நாட்டின் பொருளே நிலை காண
செய்த முயற்சி  என்றே ஆனதோ
தேவனை துளைக்கவில்லை நாங்கள் தேவனை எங்களுள்ளே மனதில் அனையா தீபமாய் ஏற்றியுள்ளோம் ,...
அந்த அன்பின் அடைக்கலமாய் இருக்கும் இயேசு பெருமானுக்கும் , அவரது அன்பு நம்பிகளுக்கும் எனது அன்பான கிறிஸ்து பிறப்பு நாளான இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்,...



 
-ரா.சதீஷ் பாலாஜி

இரு விழி உன் மீதே !!!

பெண்ணே பெண்ணில் எத்தனை வகையோ
பேரழகே பெண்ணாய் பிறந்தது என்ன வினையோ!!
உன் விழிகளில் என்னை கண்டேன் விழிகளிலே வீழ்ந்தேனடி
துளைந்த என்னை துலவவே தூது அனுப்புது என் மனம்
கவி எனக்கு  கற்பனை இலக்கணமாய் இருக்குது உன் உறவு
காலம் என் கண்ணை உன் கண்ணே உலா வருதே என்னவளே
காதலில் விழுமுன் உன் கால் கொலுசில் வீழ்ந்தேன் இனியவளே
காதலில்  வீழ்ந்தபின் உன் கால் கொலுசில் சிக்குண்ட சிறகை போல்ஆனேனடி
உன்னை பிரியாது  என் இரு விழி உன் மீதே-என் அன்பே

-ரா.சதீஷ் பாலாஜி

அலைபாயுதே மனம்

அலைபாயுதே மனம்
தல்லாடுதே குணம்
சிறகானது  சிற்பம்
சிள்ளனதோ  கலை நுட்பம்
கண்களுக்குள்ளே போதையாய்
கவி தமிழனுக்கே  சோகமோ
கற்பனை செய்யவே காமமா
கற்புக்கே இந்நாளில் விற்பனையா-ஐயஹோ  !!
காகிதம் கைகேற்ப மடிவதுபோல்
மனித குணமும் மடிகிறதோ!!
கடலாய் மனிதன் இருந்தாலும்
கடலலை போலே மனிதன் குணமும் அமைகிறது
இதில் ஆச்சர்யம் இல்லை
ஆனால்  இது மனித பிறவியின் அதிசயம் !!!!

- ரா.சதீஷ் பாலாஜி



காதலனின் காவியம்

என் வண்ணத்துப் பூச்சி அவள் பறந்த தருணம் இதோ ....
சிறகுகள் இருக்கிறதென்று என்னை சில்லுகலாக்கிச் சென்றாலோ....
பூக்கள் பல இருக்கிறதென்று புட்கள் என்னை நகர்த்தாலோ....
கண்கள் எனக்கு இருக்கிறதென்று கண்ணீர் பெருக நின்றாலோ....
மரமாய் இருந்த என்னிடம் இலைகள் பல பறித்தாலோ ...
கவியாய் என்னை படைத்துவிட்டு கடலாய் என் கரையை தகர்த்தலோ.... வெண்ணிலவாய் வந்து என் வாழ்க்கை வேடிக்கை காண செய்தாலோ.... கவிபோல் என்னை செதுக்கியவள்... .
பல கவிகள் செதுக்கச் சென்றாலோ...             
                            ..பலரால் உணரப்பட்ட ஒன்று இது .....

-ரா.சதீஷ் பாலாஜி

ஏலே நண்பா


உன்னாலே நம்மாலே நண்பா நட்பே சுவாசிக்கிறதோ
நரம்பினை நகரசெய்த புரியாத உயிர் அதிசயம் தான் நம்மை இணைத்ததோ 
இதயத்தை துடிக்க செய்தோ நம் உணர்வுகளை உணர்கிறோம்
காதலினை தூக்கிஎரியுமோ நம் உறுதியான அன்பின் பிணைப்பு
உண்மையான காதலர்களையும் சேர்த்து வைக்கும் நம் நட்பே -காதலுக்கும் முன்னோடி
தடா புடால் அனல் பறக்கும் சிறு அன்பு தகராறும் நமக்கு இனிப்பு திகட்டளுக்கு கார பிணைப்போ!!!
நண்பா உன்னை நினைக்கும்போது எனக்கு என் எஜமானது தளபதியே நினைவுக்கு வருகிறது 
உன்னை நான் கண்ட முதல் தருணம் நீயோ எனக்கு எதிராளி இப்போது நீயோ என் பங்காளி
அடிதடியால் நம் மனமும் புண் செய்ய கண்டு அதன் மருந்தாய் இப்போது நம் சுகமான நட்பு நீள்கிறது -என்னே அருமை!!
வாய்த்தகறாரு  தருணங்கள் யாவும் மறந்துவிட்டேன் என்னையே அறியேன்- நட்பே என்னை மாற்றியதோ!!
என் கனவை கலைத்த பலரும் வாழும் இங்கே- நீயோ எங்கிருந்தாலும்
உன் நிழல்களும் எனக்கு ஏணி படிக்கட்டுகளாய் என்னை உயர்த்திக்கொண்டே இருக்கிறது
என் சிலையில் சிறு பிளவு ஏற்பட்டாலும் பிளவுகளை எனக்கு கண் முன்னே காண நீ இருப்பாய் என்னும் நம்பிக்கையில் நானே வாழ நேர்கிறதோ!!
கடலாய் என்னை நீ என் ஆழம் கண்டு
கடல் அலையாய் என் மீது உன் அன்பு பாய்ச்சலை காண்பிக்கிராயே!!
மரமாய் சிலநேரங்கள் நானிருந்தாலும் நீயோ
மழையாய் என்னை குளிரவும் செய்கிறாயே-நீ ஒஸ்தி நண்பா 

ஏலே நண்பா நீ என் அன்பானவனே
என் வாழ்க்கைக்கும் துணை தாண்டிநிர்கவேனும்
நட்பை சுவாசிக்கும் அனைவருக்கும் இதை சுவாசமாக்கிறேன்,....


-'நண்பேன் டா!!!,..' ரா.சதீஷ் பாலாஜி



என் இனிய தமிழ் மக்களே !!


குயில் பாடலொன்றை கேட்டுத்தானே பொழுதுகள் விடிந்தனவோ
சேவல் கூவியதை கேட்கும் போதே விடிவதும் விளங்கியதோ
மயில் ஆட்டத்தை கண்டு கொண்டே எங்கள் இரு விழி மயங்கினவோ
எங்கள் சோம்பலில் தான் ஆம்பல் மலர்ந்தனவோ !!!
எங்கள் நாட்டில்தானே ரத்த பாசம் ஒசத்தி ; வியர்வை துளிகளிலே மழை போலியுமானால் அது இங்கே தான் அமையும் -தமிழனே தலை நிமிர்ந்து செல்
என்னே தமிழ் மனம்- சூர்யோதயம்;சுப்ரபாதம்; கந்தசஷ்டி கவசம்;யேசுவும்; அல்லாவும்,..
இறைவனை தொழுதும் இயல்பான துணிச்சலோடும் -ஒவ்வொரு நாளும்
மனிதனை மதித்தும்; செய்யும் தொழிலை இறையருளோடும் ஒப்பிட்டும்;
நான் மட்டுமின்றி என் ஒட்டுமொத்த சமுதாயமும் நன்கு வளரவே பாடுபடுவேன் என்றே சொல்லும் எங்களது மனம்-இவை யாவும்
என் இனிய தமிழ் மக்களுக்கன்றி வேறு யார்குத்தான் அமையும்,...!!!


-'தமிழன்' ரா. சதீஷ் பாலாஜி