சுண்டல் சுமை !


வியர்வை வடிகிறது அனால் பொழுது விடியவில்லை!
கடல் சீறுகிறது அனால் கண்ணீர் கரையவில்லை!!
காற்று புயல் வேகம், மேனி எழும்போடும் சதை சட்டையோரம்!!!!
சுண்டல் அனல் வீசும் ,மணல் கால் எரிக்கும்,வியர்வை கடலிநோரம்,..
கடலை சுண்டல் பஜ்ஜி மிளகாய் சூட சாப்பிடுங்க சார் சார் ,...
சாப்பிட்டு நாளாச்சு அம்மா மேடம் சுண்டல் கொஞ்சம் வாங்கிகோங்க கா....
சட்டை கிழிசல் ஓரமாய் சிறு கிழிசல் ....
அதில் தானோ சில்லறை முடியல்,...
அனல் வீசும் போது அனல் மணலாய் கரையிநோரம்  ,...
காதல் வீசும் போது சுண்டலும் கடலையும் கரைசேரும் ,...
கையில் குமுதமும் ஆனந்த விகடனும் பக்கம் பக்கமாய் பொட்டலம் போட,...
சிறு சிறு கணக்கு தாளும்அதில் சேர ,....
ஒற்றுமை தெரிகிறது அங்கே ,...
வேற்றுமை நாடகம் தான் இங்கே ,....
புத்தகம் கிடைத்தவர்களுக்கு சுண்டல் -சுவை ,......
சுண்டல் வியாபாரம் சிறுகுழந்தைகளுக்கு -சுமை,.....
சுகமும் சுமையும் ஒன்றே ஆயின் வியர்வை பூக்கள் பூத்திருக்கும்,,..
அதில் தேனீக்கள் தேன் சுரந்திருக்கும் !!!!!!!,...




0 comments:

Post a Comment