நெஞ்சுக்குள்ளே !

என்னவளே அடி என் அவளே,...
என்னை உன்னிடம் துளைத்துவிட்டேன்
சென்ற இடம் உன்னை கண்ட இடம் அங்கு என்னையும் துளைத்துவிட்டேன் ,...
காதலியே என்னை காதலித்தால் என் மனம் உருகி ஓடும் தினமே ,....
காதலையும் நித்தம் துளைத்துவிட்டால் சற்றும் சத்தமின்றி மடிவேன் மனமே ,...
நீ மாயமா இல்லை  எந்தன் மாற்றமா,..!
நீ போலியா இல்லை நான் உந்தன் வேலியா,...!
நீ மேய்வதா இல்லை நான் காய்வதா,..
இதை ஆய்வதா,சற்றும் சாய்வதா சொல்லிவிட்டால் சென்றிருபேன்  என் மனமே ,..
கொஞ்சம் கொஞ்சமாய் சாவதற்கு  மேல்,நீ சாய்வதர்க்கில்லை  !!!

கண்ணீர் பூக்கள்!

அழகிய மாலை பொழுதில் இயல்பாய் சாரல் தூர மயிலும் நடனமாட,..
இயற்கை இசை போல் நம்மோடு ஒன்றியிருந்தது,..!
 தூரப் பருந்து இரையைத்  தேட,..
பூவின் வாசம் வண்டுகள் நித்தம் நாட,..
தேனீக்கள் தேன் சுரக்க பூவும் மலர்ந்து தான் இருந்தது ,..!!
அதிகாலை பூக்கள் மொட்டு விரித்திருக்கும் கண்ணீர் போல் பனித்துளி
கசிந்திருக்கும் !!!
என்ன சொல்வேன் ? ஏது சொல்வேன் ? கண்கள் கலக்கத்துடன் சிந்தியது துளிகளாய் கண்ணீரை !,..    

விவேகானந்தர் சிந்தனை


எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.

* வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது.

* கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.

* எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.

என்றென்றும் நான்!

மழை பெய்திருக்க குடை ஓரமாய் மழைநீர் கசிந்திருக்க ,...
கண்கள் இரண்டில் நீர்த்துளிகள் தெரித்திருந்தது ! ,...
 அவ்வழியே  சென்ற மோட்டார் வாகனம் சற்றும் வேகமாய் ,....
என் கால் நனைத்திருந்த வேளையில் என் மீது வர்ணம் போல் சேறு                       தெரிதிருந்தது,.....
என் குடை ,மழை என்று செந்நீரை  தெறித்திருந்தது ,....
குடை ஒழுக நானும் ஒழுகலானேன்!!!...
 மௌனம் சூழ்ந்தது ,மழை ஓர் நொடியில் நின்றது,...!