"காதல் மழை"


நீ அழகென்று நான் நின்றிருந்தால் நாட்கள் என்னை நொந்திருக்கும்,
அனால் ரசிந்தவாரெ நகர்ந்திருந்ததால் நாட்கள் உன்னுடனே நகர்கிறது-என் ரசனையும் கூடுகிறது !
நீ அமைதி என்று நினைத்திருந்தால் ஊமை விழிகள் என்றே ஆகியிருக்கும்,
அனால் நீ பூகம்பம் என்று ஆன பிறகு  என் மனம் கூட பிளந்துவிடுகிறது -என் மனம் அலைபாய்கிறது!
உன் வாசம் புன்னகை பூஎன்றிருந்திட வண்டுகள் நானே ஆகிவிடுகிறேன் -உன்னை சூழ்ந்துவிடுகிரேன்!
நீ அழும் தருணம் என் கண்களில் சாரல் தூறும் ஆச்சர்யம் கண்டேன் -நீயோ பெண்மை என் மனம் கண்ட மென்மையும் கூட !
                                         
                                                                                   (தொடரும்)

இதயமே


துடிப்பு ஓர் உணர்ச்சி ,..
துள்ளல் புத்துணர்ச்சி ,..
இதயம் அல்லது மனம்,.
மென்மை அதன் குணம்,.
துடிப்பது நெஞ்சம், உயிர் அதனிடம் புகும் தஞ்சம்,..
நீ துடிக்க மறந்திருந்தால் நான் துடித்திருப்பேன்,.
நீ துடித்துக்கொண்டே இருந்தாலும் துடித்திருப்பேன்,.
இதயமே என் இதயமே!!

சுண்டல் சுமை !


வியர்வை வடிகிறது அனால் பொழுது விடியவில்லை!
கடல் சீறுகிறது அனால் கண்ணீர் கரையவில்லை!!
காற்று புயல் வேகம், மேனி எழும்போடும் சதை சட்டையோரம்!!!!
சுண்டல் அனல் வீசும் ,மணல் கால் எரிக்கும்,வியர்வை கடலிநோரம்,..
கடலை சுண்டல் பஜ்ஜி மிளகாய் சூட சாப்பிடுங்க சார் சார் ,...
சாப்பிட்டு நாளாச்சு அம்மா மேடம் சுண்டல் கொஞ்சம் வாங்கிகோங்க கா....
சட்டை கிழிசல் ஓரமாய் சிறு கிழிசல் ....
அதில் தானோ சில்லறை முடியல்,...
அனல் வீசும் போது அனல் மணலாய் கரையிநோரம்  ,...
காதல் வீசும் போது சுண்டலும் கடலையும் கரைசேரும் ,...
கையில் குமுதமும் ஆனந்த விகடனும் பக்கம் பக்கமாய் பொட்டலம் போட,...
சிறு சிறு கணக்கு தாளும்அதில் சேர ,....
ஒற்றுமை தெரிகிறது அங்கே ,...
வேற்றுமை நாடகம் தான் இங்கே ,....
புத்தகம் கிடைத்தவர்களுக்கு சுண்டல் -சுவை ,......
சுண்டல் வியாபாரம் சிறுகுழந்தைகளுக்கு -சுமை,.....
சுகமும் சுமையும் ஒன்றே ஆயின் வியர்வை பூக்கள் பூத்திருக்கும்,,..
அதில் தேனீக்கள் தேன் சுரந்திருக்கும் !!!!!!!,...




என் இனிய செல்லம் ப்ரொவ்னி-நேற்றும் இன்றும்! !


...............செல்ல குட்டி ப்ரொவ்னி(Brownie)...............



அழகாய் இரண்டு மூன்று  நாட்களான குட்டி செல்லம் அது,..
கைக்குள் அடக்கமாய் சிறு மொனக்கதுடன் மொய்த்துக்கொண்டே செல்லம் செய்தான்,..
எனக்கும் என் தங்கைக்கும் ஏன் என் குடும்பத்துக்கும் அவன் கொள்ளை இஷ்டம்,..
அவன் வீடெங்கும் நடக்க முடியாத போதும் தொடர்ந்து வீழ்த்தும் எழுந்தும் எங்கள் அருகில் வந்து நிற்பான்,...
நாங்கள் அவனை சிறுகுழந்தை போல் கையில்  எடுத்து கொஞ்சும் நிமிடங்கில் அவன் ஓர் அங்கம் போலானான்!,.
அவன் நிறம் பிரவுன் நிறம் ,..
எனவே அவனும் ப்ரொவ்னி என்றானான் !
                                                             
                                                                       (தொடரும்)

நெஞ்சுக்குள்ளே !

என்னவளே அடி என் அவளே,...
என்னை உன்னிடம் துளைத்துவிட்டேன்
சென்ற இடம் உன்னை கண்ட இடம் அங்கு என்னையும் துளைத்துவிட்டேன் ,...
காதலியே என்னை காதலித்தால் என் மனம் உருகி ஓடும் தினமே ,....
காதலையும் நித்தம் துளைத்துவிட்டால் சற்றும் சத்தமின்றி மடிவேன் மனமே ,...
நீ மாயமா இல்லை  எந்தன் மாற்றமா,..!
நீ போலியா இல்லை நான் உந்தன் வேலியா,...!
நீ மேய்வதா இல்லை நான் காய்வதா,..
இதை ஆய்வதா,சற்றும் சாய்வதா சொல்லிவிட்டால் சென்றிருபேன்  என் மனமே ,..
கொஞ்சம் கொஞ்சமாய் சாவதற்கு  மேல்,நீ சாய்வதர்க்கில்லை  !!!

கண்ணீர் பூக்கள்!

அழகிய மாலை பொழுதில் இயல்பாய் சாரல் தூர மயிலும் நடனமாட,..
இயற்கை இசை போல் நம்மோடு ஒன்றியிருந்தது,..!
 தூரப் பருந்து இரையைத்  தேட,..
பூவின் வாசம் வண்டுகள் நித்தம் நாட,..
தேனீக்கள் தேன் சுரக்க பூவும் மலர்ந்து தான் இருந்தது ,..!!
அதிகாலை பூக்கள் மொட்டு விரித்திருக்கும் கண்ணீர் போல் பனித்துளி
கசிந்திருக்கும் !!!
என்ன சொல்வேன் ? ஏது சொல்வேன் ? கண்கள் கலக்கத்துடன் சிந்தியது துளிகளாய் கண்ணீரை !,..    

விவேகானந்தர் சிந்தனை


எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.

* வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது.

* கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.

* எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.