ஏலே நண்பா


உன்னாலே நம்மாலே நண்பா நட்பே சுவாசிக்கிறதோ
நரம்பினை நகரசெய்த புரியாத உயிர் அதிசயம் தான் நம்மை இணைத்ததோ 
இதயத்தை துடிக்க செய்தோ நம் உணர்வுகளை உணர்கிறோம்
காதலினை தூக்கிஎரியுமோ நம் உறுதியான அன்பின் பிணைப்பு
உண்மையான காதலர்களையும் சேர்த்து வைக்கும் நம் நட்பே -காதலுக்கும் முன்னோடி
தடா புடால் அனல் பறக்கும் சிறு அன்பு தகராறும் நமக்கு இனிப்பு திகட்டளுக்கு கார பிணைப்போ!!!
நண்பா உன்னை நினைக்கும்போது எனக்கு என் எஜமானது தளபதியே நினைவுக்கு வருகிறது 
உன்னை நான் கண்ட முதல் தருணம் நீயோ எனக்கு எதிராளி இப்போது நீயோ என் பங்காளி
அடிதடியால் நம் மனமும் புண் செய்ய கண்டு அதன் மருந்தாய் இப்போது நம் சுகமான நட்பு நீள்கிறது -என்னே அருமை!!
வாய்த்தகறாரு  தருணங்கள் யாவும் மறந்துவிட்டேன் என்னையே அறியேன்- நட்பே என்னை மாற்றியதோ!!
என் கனவை கலைத்த பலரும் வாழும் இங்கே- நீயோ எங்கிருந்தாலும்
உன் நிழல்களும் எனக்கு ஏணி படிக்கட்டுகளாய் என்னை உயர்த்திக்கொண்டே இருக்கிறது
என் சிலையில் சிறு பிளவு ஏற்பட்டாலும் பிளவுகளை எனக்கு கண் முன்னே காண நீ இருப்பாய் என்னும் நம்பிக்கையில் நானே வாழ நேர்கிறதோ!!
கடலாய் என்னை நீ என் ஆழம் கண்டு
கடல் அலையாய் என் மீது உன் அன்பு பாய்ச்சலை காண்பிக்கிராயே!!
மரமாய் சிலநேரங்கள் நானிருந்தாலும் நீயோ
மழையாய் என்னை குளிரவும் செய்கிறாயே-நீ ஒஸ்தி நண்பா 

ஏலே நண்பா நீ என் அன்பானவனே
என் வாழ்க்கைக்கும் துணை தாண்டிநிர்கவேனும்
நட்பை சுவாசிக்கும் அனைவருக்கும் இதை சுவாசமாக்கிறேன்,....


-'நண்பேன் டா!!!,..' ரா.சதீஷ் பாலாஜி



0 comments:

Post a Comment