வொய் திஸ் கொலவெறி டி!!

ஹாய் மாமேய் திஸ் இஸ் ஹாட் சாங் மை கேர்ள் சாங்கு,....
சுவீட்டு கேர்ள் மை லாஸ்ட் கேர்ள் ஜஸ்ட் மை கேல் டா,...
ட்ரிங் ட்ரிங் போன் ட்ரிங் அவளே என் காலர்  டுயுன்,...   
என் கண்ணே என் முன்னே  என்னை கொலை செய்தாலே,.....
முன்னே அவள் தூரமாய் ஒரு நிலவாய் என்னை பார்த்து சென்றாள்,..
நானோ என்னை மட்டும் பார்த்து சென்றலேன்றே நின்றேன் நிலையறியாது,...
காதல் என்ன கள்வர்களின் ராஜ்யமோ,......
கள்வன் நானில்லை காவலனாய் நானே நின்றேன்,...
தொலை தூர காற்றாய் இருந்தாலும் எனக்கு அவள் என்னை வருடும் சில சில்லான காற்றின் உறசலானால் ,...
கற்பை துளைத்த கன்னி நீயோ என் கற்பை காகிதமாய் பறக்க செய்த கயவள் நீயோ,....
வொய் திஸ் கொலவெறி டி!!!

-'கொலவெறி' ரா.சதீஷ் பாலாஜி ,..
                   

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அன்பர்களே,..

ஆதமும் ஏவாலும் கொண்ட அந்த மனித விதை
இன்று ஆண்பால் பெண்பால் என்றே வளரக் கண்டேன்
சினம்கொண்டு சிலுவையில் ஏற்றப்பட்ட இயேசுவை  காண என் கண்கள் மறுத்தன
படைப்பின் பொருளை துளைத்தது மனித இனமோ என்றே எண்ணி இருந்தேன்
ஆனால் அது ஒரு பரம் பொருளை தன நாட்டின் பொருளே நிலை காண
செய்த முயற்சி  என்றே ஆனதோ
தேவனை துளைக்கவில்லை நாங்கள் தேவனை எங்களுள்ளே மனதில் அனையா தீபமாய் ஏற்றியுள்ளோம் ,...
அந்த அன்பின் அடைக்கலமாய் இருக்கும் இயேசு பெருமானுக்கும் , அவரது அன்பு நம்பிகளுக்கும் எனது அன்பான கிறிஸ்து பிறப்பு நாளான இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்,...



 
-ரா.சதீஷ் பாலாஜி

இரு விழி உன் மீதே !!!

பெண்ணே பெண்ணில் எத்தனை வகையோ
பேரழகே பெண்ணாய் பிறந்தது என்ன வினையோ!!
உன் விழிகளில் என்னை கண்டேன் விழிகளிலே வீழ்ந்தேனடி
துளைந்த என்னை துலவவே தூது அனுப்புது என் மனம்
கவி எனக்கு  கற்பனை இலக்கணமாய் இருக்குது உன் உறவு
காலம் என் கண்ணை உன் கண்ணே உலா வருதே என்னவளே
காதலில் விழுமுன் உன் கால் கொலுசில் வீழ்ந்தேன் இனியவளே
காதலில்  வீழ்ந்தபின் உன் கால் கொலுசில் சிக்குண்ட சிறகை போல்ஆனேனடி
உன்னை பிரியாது  என் இரு விழி உன் மீதே-என் அன்பே

-ரா.சதீஷ் பாலாஜி

அலைபாயுதே மனம்

அலைபாயுதே மனம்
தல்லாடுதே குணம்
சிறகானது  சிற்பம்
சிள்ளனதோ  கலை நுட்பம்
கண்களுக்குள்ளே போதையாய்
கவி தமிழனுக்கே  சோகமோ
கற்பனை செய்யவே காமமா
கற்புக்கே இந்நாளில் விற்பனையா-ஐயஹோ  !!
காகிதம் கைகேற்ப மடிவதுபோல்
மனித குணமும் மடிகிறதோ!!
கடலாய் மனிதன் இருந்தாலும்
கடலலை போலே மனிதன் குணமும் அமைகிறது
இதில் ஆச்சர்யம் இல்லை
ஆனால்  இது மனித பிறவியின் அதிசயம் !!!!

- ரா.சதீஷ் பாலாஜி



காதலனின் காவியம்

என் வண்ணத்துப் பூச்சி அவள் பறந்த தருணம் இதோ ....
சிறகுகள் இருக்கிறதென்று என்னை சில்லுகலாக்கிச் சென்றாலோ....
பூக்கள் பல இருக்கிறதென்று புட்கள் என்னை நகர்த்தாலோ....
கண்கள் எனக்கு இருக்கிறதென்று கண்ணீர் பெருக நின்றாலோ....
மரமாய் இருந்த என்னிடம் இலைகள் பல பறித்தாலோ ...
கவியாய் என்னை படைத்துவிட்டு கடலாய் என் கரையை தகர்த்தலோ.... வெண்ணிலவாய் வந்து என் வாழ்க்கை வேடிக்கை காண செய்தாலோ.... கவிபோல் என்னை செதுக்கியவள்... .
பல கவிகள் செதுக்கச் சென்றாலோ...             
                            ..பலரால் உணரப்பட்ட ஒன்று இது .....

-ரா.சதீஷ் பாலாஜி

ஏலே நண்பா


உன்னாலே நம்மாலே நண்பா நட்பே சுவாசிக்கிறதோ
நரம்பினை நகரசெய்த புரியாத உயிர் அதிசயம் தான் நம்மை இணைத்ததோ 
இதயத்தை துடிக்க செய்தோ நம் உணர்வுகளை உணர்கிறோம்
காதலினை தூக்கிஎரியுமோ நம் உறுதியான அன்பின் பிணைப்பு
உண்மையான காதலர்களையும் சேர்த்து வைக்கும் நம் நட்பே -காதலுக்கும் முன்னோடி
தடா புடால் அனல் பறக்கும் சிறு அன்பு தகராறும் நமக்கு இனிப்பு திகட்டளுக்கு கார பிணைப்போ!!!
நண்பா உன்னை நினைக்கும்போது எனக்கு என் எஜமானது தளபதியே நினைவுக்கு வருகிறது 
உன்னை நான் கண்ட முதல் தருணம் நீயோ எனக்கு எதிராளி இப்போது நீயோ என் பங்காளி
அடிதடியால் நம் மனமும் புண் செய்ய கண்டு அதன் மருந்தாய் இப்போது நம் சுகமான நட்பு நீள்கிறது -என்னே அருமை!!
வாய்த்தகறாரு  தருணங்கள் யாவும் மறந்துவிட்டேன் என்னையே அறியேன்- நட்பே என்னை மாற்றியதோ!!
என் கனவை கலைத்த பலரும் வாழும் இங்கே- நீயோ எங்கிருந்தாலும்
உன் நிழல்களும் எனக்கு ஏணி படிக்கட்டுகளாய் என்னை உயர்த்திக்கொண்டே இருக்கிறது
என் சிலையில் சிறு பிளவு ஏற்பட்டாலும் பிளவுகளை எனக்கு கண் முன்னே காண நீ இருப்பாய் என்னும் நம்பிக்கையில் நானே வாழ நேர்கிறதோ!!
கடலாய் என்னை நீ என் ஆழம் கண்டு
கடல் அலையாய் என் மீது உன் அன்பு பாய்ச்சலை காண்பிக்கிராயே!!
மரமாய் சிலநேரங்கள் நானிருந்தாலும் நீயோ
மழையாய் என்னை குளிரவும் செய்கிறாயே-நீ ஒஸ்தி நண்பா 

ஏலே நண்பா நீ என் அன்பானவனே
என் வாழ்க்கைக்கும் துணை தாண்டிநிர்கவேனும்
நட்பை சுவாசிக்கும் அனைவருக்கும் இதை சுவாசமாக்கிறேன்,....


-'நண்பேன் டா!!!,..' ரா.சதீஷ் பாலாஜி



என் இனிய தமிழ் மக்களே !!


குயில் பாடலொன்றை கேட்டுத்தானே பொழுதுகள் விடிந்தனவோ
சேவல் கூவியதை கேட்கும் போதே விடிவதும் விளங்கியதோ
மயில் ஆட்டத்தை கண்டு கொண்டே எங்கள் இரு விழி மயங்கினவோ
எங்கள் சோம்பலில் தான் ஆம்பல் மலர்ந்தனவோ !!!
எங்கள் நாட்டில்தானே ரத்த பாசம் ஒசத்தி ; வியர்வை துளிகளிலே மழை போலியுமானால் அது இங்கே தான் அமையும் -தமிழனே தலை நிமிர்ந்து செல்
என்னே தமிழ் மனம்- சூர்யோதயம்;சுப்ரபாதம்; கந்தசஷ்டி கவசம்;யேசுவும்; அல்லாவும்,..
இறைவனை தொழுதும் இயல்பான துணிச்சலோடும் -ஒவ்வொரு நாளும்
மனிதனை மதித்தும்; செய்யும் தொழிலை இறையருளோடும் ஒப்பிட்டும்;
நான் மட்டுமின்றி என் ஒட்டுமொத்த சமுதாயமும் நன்கு வளரவே பாடுபடுவேன் என்றே சொல்லும் எங்களது மனம்-இவை யாவும்
என் இனிய தமிழ் மக்களுக்கன்றி வேறு யார்குத்தான் அமையும்,...!!!


-'தமிழன்' ரா. சதீஷ் பாலாஜி

தலைவா


என்திரமனிதா என் இதயத்தை நடிப்பால் மட்டுமே அன்றி
உன்(கள்) மாசற்ற மனித குணமால் கிர்ரென என்னை உங்கள் வசம் ஈர்கிண்றீரே
உங்கள் நடை உடை பாவனை உங்களுக்கே ஆன ஒன்றாய் இருந்தாலும்
அது எங்கள் அனைவருக்கும் வருடகால பயிற்சி மற்றும் நாடி துடிப்பிலும் கலந்துவிட்டது -என்னே ஆச்சர்யம் !!
தமிழர் என்றே பெருமிதம் கொல்லாத மனிதர்கள் இருந்தாலும்
"என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களே" என்றே உங்கள் சுவாசம் இருகிறதே
-என்னே வியப்பு !!
கடவுளை சிலையாய் கொண்டாடும் மாந்தர்கள் மத்தியில் -நீயோ கொண்டாடும்
அமைதியான இறையருள் ,..இருட்டில் வரும் ஒளியை போலே ,....
உன் ரசிகர்கள் கூட்டம் இந்த உலகத்தில் உள்ள எல்லா மூலைகளிலும் இருக்கும் சிறப்பு வேறு யாருக்குமே இல்லை -தமிழனாய் இந்தியனாய் பெருமைபடுகிறேன்
இமையம் தொட்ட உமக்கு இமயமே உயரமன்று- உமக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தரும் கரகொஷமமும் விசிலுமே இமையம் என்கிறது என் மனம்,..
இமயங்கள் பல தொட்டாலும் கண் இமைப்பது போல அதை பெரிது கொள்ளாமல் இருக்கும் உன் மாமனித உணர்வு என்னை நெகிழ செய்கிறது,..
உங்களை பற்றி வாழ்த்த வயதில்லை -அனால்
வாழ்த்தாமல் இருக்க என்னால் இயலவில்லை -தலைவா!!!

-ரா.சதீஷ் பாலாஜி

மது -விடியலே வா !!


அடியே மது உன் நினைவிலே என் நினைவை இழந்தேனடி
மதுவே என் மனமாக்கி கொண்டேனடி என் தோழி
மாது மீது பாயுதே எண்ணம் உன்னை என்னுள் ஏற்றியவுடன்
உன் தீங்கு குணத்தை நானே அறியேன் -என்ன செய்தேனோ
உன் முகம் என் இரவை தொலைத்துவிடுதே
என்னவளின் கண்ணீர் எனக்கு புலப்படவில்லையே-ஐயோ
மனவருத்தம் என் இதயத்தை காயம்செய்ய எனக்கு
விழியில்லாத வழித்தடங்கள் தான் தெரிகிறதே
என்னை எரிக்கும் இந்த கானல் சுரக்கும் மதுவே
விலகி நில்-தூரம் செல்
என்னை துடிக்கச்செய்து உனக்கு என்ன லாபமோ !!!!
கண்ணீர் சுமக்கும் என்னவள் என்னை கடைகால சுமைபோல் துடித்துக்கொண்டே இருக்கிற வலி -நரக வலி
என்னை மீட்டிடு இறையருளே !!!

-ரா.சதீஷ் பாலாஜி

ரயில் பயணம்

சல சலவென காற்று வீச
பட பட ரயில் பெட்டிகள் நகர்ந்தனவோ !
ஜன்னல்கள் இருக்கும் வீடல்ல ரயில்
இது போக்குவரத்தின் அழகான மயில்
காற்றை நேசிபவற்கு இது காதல் பயணம்
காதல் நேசிபவற்கு இது காகிதப் பயணம்
ஆடதெரியாதவரையும் ஆடவைத்திடுமோ ரயில்
வாழ தெரியதவரையும் வகுத்திடுமோ இந்த ரயில்
மேடும் பள்ளமும் இதன் சக்கரத்திற்கு வித்தை
சந்திப்பு தோறும் தின்பண்ட்டங்கள் நமது பற்களை பதம்பார்திடும் விந்தை
மக்கள் பல கோடி இருந்தாலும்
மொழி மாறி அமைந்தாலும்
ஜன்னல் இருக்கைகளும் டீ காபி சாயா குரலும் இவர்களுக்கு பிரசித்தம்
சிறு சிறு புன்னகையும்
சில பல குடும்பங்களும்
சினம் கொண்ட சீமான்களையும்
அமைதி படச் செய்திடுமோ ரயில் பயணம்
நிறம் சிவப்பு என இருந்தாலும்
நிறுத்தம் சில ஏற்பட்டாலும்
காற்றுகேற்ப கொடி அசைவதுபோல்
கூத்துகேற்ப சிறைச் சாலையோ ரயில்
இருக்காய் நம்பர்களும் இருக்கை நண்பர்களும் ரில் பயணத்திலன்றி எங்கே அமையும் !!??

-ரா.சதீஷ் பாலாஜி

எழுச்சி காண்போம்

கலையின் கரையில் கரையுமா சிற்பம்!
கரையா சிற்பமும் கரையுமோ கரையில்
கரையா நெஞ்சம் கரையும் வரையில்
கரையுமோ கவியின் கற்பனைக் குயில்கள்
வளையாதவற்கு வலியும் -கூட
வளையா அம்பும் அன்பில்லாது போக
பயிரிட்ட பயிரும் விளையாது போக
பயிரிடாத நிலையில் பசியும் ,பட்டினியும்- தான் தலைகாட்ட
சீரான சிந்தனை சிறப்பான நோக்கம்
பல்லுயிர் அன்பு பலமான பண்பு
வீரத்தை விதையாய் பயிரிடும் உணர்ச்சி
காலம் கடந்த நாட்டுப் பற்று
அயராது உழைத்தால் அயல்நாடும் அஞ்சும் -நம்மை
துயராது நினைத்தால் துன்பம்தான் உண்மையில் மிஞ்சும்!!!

-ரா.சதீஷ் பாலாஜி

அனைத்து உலக தமிழர்களுக்கான அழைப்பு

எனது அன்பு நெஞ்சங்களே,
உங்கள் தமிழை இந்த இடத்தில தத்து கொடுங்களேன் அனைவரும் தமிழை கொஞ்சி மகிழலாம்.

உஙகள் பங்களிப்பை இந்த தலத்தில் பதிவு செய்ய  kavintamilan.gmail.com (மின்னஞ்சல்) அனுப்பவும் .

நன்றி