அழகு ,....இவ்வளவு அருகிலா!!,..

பட்டுபூ போன்ற மேனி இருக்க ,......
கருமை சிறகாய் என் உடல் மயிர் பிறக்க ,....
என் கருவிழி குளுமை வேண்டி நீண்ட கடல் போல அலைப்பாய்ந்தது,....
சிந்தனைகளும்,இயற்கை அழகும் என்னை கொஞ்சம் கொஞ்சமாய் அதன் வசம் கொண்டது,...
சிறகுகள் இல்லாப் பறவைகள் போலே வாழும் மனிதர்கள் மத்தியில் ,....
என் கனவுகளுக்கு சிறகினை கொடுத்து பறக்க விட்டேன் ,.....
வெயில், வெளிச்சம் வெப்பம் இவை மட்டும் தந்தாலும் ,...
நம்மை  அவை சுட்டெரிக்க மறப்பதில்லை,....
கடும் வெயிலே ஆனாலும் மழை பெய்திடும் நிழல் கூட தெரிவதில்லை ,....
குடை ஒன்றை எடுத்தாலும் விவர்வை நம்மை விட்டுப் பிரிவதும்மில்லை,...
இப்படி இருக்க எனக்கு Lakmé என்னும் நட்பு சொன்னது ,......
நான் உன்னுடன் இருக்கும் போது சூரியனின் நிழல் போல சுகமாய் தான் தெரிவேன் என்பதுதான் ,....
அதை அடுத்து ,..
நானும் அவளை அழைத்து சென்றேன் ,......
அது ஒரு கடற்கரை பொழுது  ,...
அழகிய மங்கைகள் மற்றும் மக்கள் விளையாடி கொண்டிருக்க,...  
மணல் காற்றும் வீச,...
இதமாய் Lakmé என் அருகே நின்றால்,.....
என் அன்னை என்னை காத்ததுபோல் என்னை  அவள்  மடிசாய்துக் கொண்டாள்,..
அதில் காதல் வாடை வீச ,..
காதல் பாடல் ஒன்றும் பாட இதமாய் என் இன்ப வியர்வை அவள் மடியிலே சொட்டியது ,...
கோடை வெயிலில் இதமாய் மழை பெய்தது என்றாள் !!,...

கல்லூரி -நிஜமும் நிழலும்


                           பகுதி-1
  
என் ஜன்னல் என்னை மெல்ல ஈர்க்க ,...
குளிர் காற்றின் ஏக்கத்தில் திறந்தேன் என் கல்லூரி கதவை,...
காற்றின் வேகம் என்னை பல துரம்  பின் ஓடச்செய்தது ,......
அன்று என் கனவில் வந்தது பேய் படங்களில் வரும் கல்லறைகள் தான்,..
என் கனவு கப்பலை துளைத்தபடி என் கண்ணீர் மல்க நின்றிரிருன்தேன் ,..
குளிரடித்தது லேப் கோட் ஒன்றை தேடி எடுத்தேன் ,.....
அது என் நட்பின் சாயல் ,.......
என் நட்பும் கல்லூரியை விட்டு மேற்கே ஓடிச்செல்ல ,....
என் நெஞ்சமும் கிழக்கே சென்றுவிட்டது,...
புத்தகங்கள் இங்கு இலவசமாய்  இவன்வசமாய் இல்லை ,.....
அணைத்து மாணக்களும்   இங்கு அறிவாலும், அன்பாலும் ஊக்கிவிக்கப்படுவதும் இல்லை ,....
துருயேறிய   இரும்பினை போலே எங்கள் வலுவினையும் இழந்தே போனோம்,...
 வலைகளில் சிக்கிய மீனாய்  வெளியேறிய சந்தோஷம் போலே உயிர் துடிக்க நின்றோம்,...
                                                                                                           
                                                                                                                      (தொடரும் ,.....)

அன்றோர் மழை பெய்தது !!!

அன்று ஒரு நாள் நன்கு மழை பெய்தது ,...
நான் மழையில் நனைந்தபடி குடை பிடிக்கவும் மறந்துவிட்டேன்,...
தென்றல் காற்று மெல்ல வீச நானோ சிறகாய் பறக்க துணிந்தேன்,...
வாகனங்கள் பலவும் சப்தமிட்டு கொண்டிருக்க
-என் செவிகள் அதை கேட்கவும் மறந்து விட்டது,...
 இது காதல் மயக்கமா அல்லது என் இருவிழி தயக்கமா,...


வொய் திஸ் கொலவெறி டி!!

ஹாய் மாமேய் திஸ் இஸ் ஹாட் சாங் மை கேர்ள் சாங்கு,....
சுவீட்டு கேர்ள் மை லாஸ்ட் கேர்ள் ஜஸ்ட் மை கேல் டா,...
ட்ரிங் ட்ரிங் போன் ட்ரிங் அவளே என் காலர்  டுயுன்,...   
என் கண்ணே என் முன்னே  என்னை கொலை செய்தாலே,.....
முன்னே அவள் தூரமாய் ஒரு நிலவாய் என்னை பார்த்து சென்றாள்,..
நானோ என்னை மட்டும் பார்த்து சென்றலேன்றே நின்றேன் நிலையறியாது,...
காதல் என்ன கள்வர்களின் ராஜ்யமோ,......
கள்வன் நானில்லை காவலனாய் நானே நின்றேன்,...
தொலை தூர காற்றாய் இருந்தாலும் எனக்கு அவள் என்னை வருடும் சில சில்லான காற்றின் உறசலானால் ,...
கற்பை துளைத்த கன்னி நீயோ என் கற்பை காகிதமாய் பறக்க செய்த கயவள் நீயோ,....
வொய் திஸ் கொலவெறி டி!!!

-'கொலவெறி' ரா.சதீஷ் பாலாஜி ,..
                   

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அன்பர்களே,..

ஆதமும் ஏவாலும் கொண்ட அந்த மனித விதை
இன்று ஆண்பால் பெண்பால் என்றே வளரக் கண்டேன்
சினம்கொண்டு சிலுவையில் ஏற்றப்பட்ட இயேசுவை  காண என் கண்கள் மறுத்தன
படைப்பின் பொருளை துளைத்தது மனித இனமோ என்றே எண்ணி இருந்தேன்
ஆனால் அது ஒரு பரம் பொருளை தன நாட்டின் பொருளே நிலை காண
செய்த முயற்சி  என்றே ஆனதோ
தேவனை துளைக்கவில்லை நாங்கள் தேவனை எங்களுள்ளே மனதில் அனையா தீபமாய் ஏற்றியுள்ளோம் ,...
அந்த அன்பின் அடைக்கலமாய் இருக்கும் இயேசு பெருமானுக்கும் , அவரது அன்பு நம்பிகளுக்கும் எனது அன்பான கிறிஸ்து பிறப்பு நாளான இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்,...



 
-ரா.சதீஷ் பாலாஜி

இரு விழி உன் மீதே !!!

பெண்ணே பெண்ணில் எத்தனை வகையோ
பேரழகே பெண்ணாய் பிறந்தது என்ன வினையோ!!
உன் விழிகளில் என்னை கண்டேன் விழிகளிலே வீழ்ந்தேனடி
துளைந்த என்னை துலவவே தூது அனுப்புது என் மனம்
கவி எனக்கு  கற்பனை இலக்கணமாய் இருக்குது உன் உறவு
காலம் என் கண்ணை உன் கண்ணே உலா வருதே என்னவளே
காதலில் விழுமுன் உன் கால் கொலுசில் வீழ்ந்தேன் இனியவளே
காதலில்  வீழ்ந்தபின் உன் கால் கொலுசில் சிக்குண்ட சிறகை போல்ஆனேனடி
உன்னை பிரியாது  என் இரு விழி உன் மீதே-என் அன்பே

-ரா.சதீஷ் பாலாஜி

அலைபாயுதே மனம்

அலைபாயுதே மனம்
தல்லாடுதே குணம்
சிறகானது  சிற்பம்
சிள்ளனதோ  கலை நுட்பம்
கண்களுக்குள்ளே போதையாய்
கவி தமிழனுக்கே  சோகமோ
கற்பனை செய்யவே காமமா
கற்புக்கே இந்நாளில் விற்பனையா-ஐயஹோ  !!
காகிதம் கைகேற்ப மடிவதுபோல்
மனித குணமும் மடிகிறதோ!!
கடலாய் மனிதன் இருந்தாலும்
கடலலை போலே மனிதன் குணமும் அமைகிறது
இதில் ஆச்சர்யம் இல்லை
ஆனால்  இது மனித பிறவியின் அதிசயம் !!!!

- ரா.சதீஷ் பாலாஜி